கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார். இவரது மகன் பாலமுருகன் (21). திருமணமாகாத இவர் பிடெக் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் சிரமமான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

Sub-Inspector medical expenses - police Humanities

இவருக்கான சிகிச்சை செலவை செய்யமுடியாமல் சரவணன் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இந்த செய்தி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மற்றும் சக காவலர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலர்கள் தரப்பில் சரவணனுக்கு உதவி செய்வது என முடிவெடுத்து, அந்த தகவலை வாட்ஸ்அப் குழு மூலம் காவல்துறை நண்பர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஒன்றுசேர்ந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர். அந்த நிதியை பாலமுருகன் மருத்துவ செலவுக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சமபவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும், காவல்துறையினர் மீது பெரும் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது.