sub Inspector has been arrested red-handed while accepting a bribe

குடும்ப பஞ்சாயத்து புகாரில் பெண் உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

Advertisment

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகில் கீழ் பளனந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேலின் மனைவிக்கும் சகோதரிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் இது தொடர்பாக வெற்றிவேலின் மனைவி பரிமளா திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி விசாரணையை முடித்து எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு காவல் நிலைய செலவிற்காக லஞ்சமாக 3000 கேட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisment

குடும்பப் பிரச்சினையில் மன உளைச்சலில் இருந்த வெற்றிவேல் லஞ்ச பணம் கொடுக்க விருப்பம் இல்லாமல் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகனிடம் புகார் மனு அளித்துள்ளார். இன்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி பணியில் இருக்கும் போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெற்றிவேல் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பரமேஸ்வரியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் லஞ்சம் பெரும்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.