மு

கனமழை வெள்ளம் காரணமாக முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக பராமரிக்க உத்தரவிடுமாறு கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தது. அப்போது முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட துணைக் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இதையடுத்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட துணைக்குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவின் துணைத் தலைவராக தேனி மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment