Skip to main content

சப்-டிவிசன் தெரியாமல் தவிக்கும் அரசு அதிகாரிகள்... குற்றங்கள் அதிகாரிக்கும் அபாயம்

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்துடன் கடையம், மற்றும் ஆழ்வார்குறிச்சி (சப்-டிவிசன்)  குறு வட்டங்கள் இணைக்கப்பட்டன். இதைத் தொடர்ந்து அதன் வரையரைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த இரண்டு குறு வட்டங்களின் வருவாய் மற்றும் காவல் சரகங்கள் அம்பை டி.எஸ்.பி. கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்தச் சூழலில் இவைகள் ஆலங்குளம் சப்டிவிசனுடன் இணைக்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வருகின்ற நிலையில் அரசுத் தரப்பிலோ சாதகமான பதில் கிடைத்தாலும், அறிவிப்பாணை  பிறப்பிக்கப்படவில்லை.

 

Sub-divisional government officials...

 

இதனால் மக்களிடத்தில் கடும் குழப்பங்கள் நிலவுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். குற்றச் சம்பவங்கள் மற்றும் விவகாரங்கள் பொருட்டு எந்த சப்டிவிசனுக்குச் செல்வது என்ற நிலையில் பல்வேறு பிரச்சனைகள் கிளம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குற்றச் சம்பவங்களும் அதிகாரிக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினரோ, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டத்திற்கோ அனுமதியின் பொருட்டு எந்த சப்டிவிசன் செல்வது என்று திணறுகின்றனர்.

 

Sub-divisional government officials...

 

இந்தத் தவிப்பிலிருந்து போலீஸ் அதிகாரிகளும் தப்பவில்லை. ஒரு குற்றவாளி சிக்கினால் அதன் பொருட்டு, எந்த சப்டிவிசன் டி.எஸ்.பி.யிடம் ஆலோசனை பெறுவது, குண்டர் சட்டம் என்றால் எந்த கலெக்டரிடம் அணுக வேண்டும் என்று அதிகாரிகளே மன உனைச்சலால் திணறி வருகின்றனர். பரிதவிப்பிலிருக்கிறார்கள். அதற்கு ஒரே தீர்வு ஆழ்வார்குறிச்சி, மற்றும் கடையம் எந்த சப்டிவிகளின் கீழ் செயல்படுவது என்பதை தொடர்புடைய உயரதிகாரிகள் தான் வெளிப்படுத்த வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் குற்றச் சம்பவங்களுக்கு வழி ஏற்படுத்திவிடாமலிருப்பதற்காக உடனடி நடவடிக்கை அத்யாவசியம் என்பதே யதார்த்தமாகத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.