Su. Venkatesan has alleged that illegal quarrying is taking place

மதுரை அருகே உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக குவாரிப்பணிகள் நடப்பதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் இங்கு குவாரிப் பணிகள் நடப்பதால் சுற்றுச்சூழலுக்கும், கானுயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Advertisment

இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீரழிவும் ஏற்படும். ஊடகங்கள் இது குறித்து செய்திகள் வெளியிட்ட பின்பும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. இங்கு நடைபெற்றுள்ள சட்டவிரோதக் குவாரி நடவடிக்கைகள் மீது தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment