Su. Venkatesan criticizes Modi for taking low-angle photos plane crash site

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம்(12.6.2025) மதியம் 1.39 மணிக்கு பேயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை(விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார்.

இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அவரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விமானம் வெடித்துச் சிதறி விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் உடல்நல குறித்து கேட்டறிந்தார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

Advertisment

இந்த நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேச வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நீர் துளியை கலையின் மூலம் பல்வேறு கோணங்களில்கையாளலாம். ஆனால் கண்ணீர் துளியை துயரத்தின் வழியாகவே கையாள வேண்டும். தேசம் பதறும் ஒரு பெரும் கண்ணீர் துளி முன்லோ ஆங்கிள் சாட்டில் பிரதமர். ரீல்ஸ் வெளியிடும் விமானத்துறை அமைச்சர். வீழந்து கிடப்பது விமானம் மட்டுமல்ல… மாண்புகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.