Skip to main content

சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மரணம்

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

stunt master judo rathinam passed away

 

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பினால் காலமாகியுள்ளார்.

 

93 வயதான ஜூடோ ரத்தினம் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜூடோ ரத்தினம் தற்போது உயிரிழந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

 

எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி அளித்தவர். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி கதாநாயகனாக நடித்திருந்த தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது உடல் அவரின் சொந்த ஊரான குடியாத்தத்தில் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவரது இறப்பு குறித்து அறிந்த சினிமா பிரபலங்கள் ஜூடோ ரத்தினத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“எனக்கு தெரிந்த ஒரே கட்சி என் தங்கச்சிதான்...” - நடிகர் பாலா

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
 actor Bala said that I have no intention of joining politics

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைந்து, குடியாத்தம் பிரீமியர் கிரிக்கெட் லீக் (GPCL) என்ற அமைப்பை தொடங்கி, இதில் 12 அணிகள் சேர்க்கப்பட்டு சுமார் 200 இளம் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று கடந்த மூன்று மாதங்களாக 75 போட்டிகள் நடைபெற்றது. 

இதனையடுத்து இறுதிப் போட்டி  நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் கே.பி.ஒய் பாலா செய்தியாளரிடம் பேசியபோது, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் முடிந்தவற்றை உதவி செய்தேன். மற்றவர்கள் உதவி செய்யவில்லை எனக் கூறும் தகுதி எனக்கு இல்லை.

எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை, எனக்கு எந்த கட்சியும் தெரியாது. எனக்கு தெரிந்த ஒரே கட்சி எனது தங்கச்சி எனக் கூறியவர். எனக்கு பொலிட்டிக்கல் மேப் வாங்க கூட தெரியாது. நான் எங்க இருந்து பொலிட்டிக்களில் வருவேன் என்றார்.