தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள்நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், கால்வாய் அகலப்படுத்தும் பணிகள், மின்வாரிய பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் எஸ். ஆர்.பி. வடக்கு தெருவில் மின்மாற்றிக்காக கட்டப்பட்டு வரும் புதியபணிகளை ஆய்வு செய்தார்.
முதல்வரின் இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். மேலும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முடிவுற்ற திட்டங்களையும் முதல்வர் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.