Advertisment

திருச்சி- காரைக்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள் ஆய்வு!

Study of electrified railway lines between Trichy and Karaikudi!

Advertisment

திருச்சி - காரைக்குடி இடையே 89 கி.மீ. ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.இந்த பாதையில் ரயில் பாதுகாப்பு கமிஷனர் அபய் குமார் ராய் இன்று ஆய்வு நடத்தினார்.

திருச்சியிலிருந்து காலை 09.05 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி மார்க்கத்தில் செல்லும் ஆய்வு ரயிலில் பயணித்தபாதுகாப்பு கமிஷனர், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், மேம்பாலங்கள் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வு மாலை 03.20 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து காரைக்குடி- திருச்சி இடையே மின்சார இன்ஜின் பொறுத்தப்பட்ட ரயில் மூலம் வேக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன்காரணமாகபொதுமக்கள், ரயில் பாதை அருகே வசிப்போர் மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை ரயில் பாதையை கடக்கவோ, அருகில் நெருங்கவோ அனுமதிக்கப்படவில்லை.

inspection Train Karaikudi trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe