ச்ட்

பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.

Advertisment

தனது ஸ்டூடியோ கிரீன்ஸ் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வரும் ஞானவேல்ராஜா, வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

Advertisment

மேலும், இவ்வழக்கின் மறு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.