Students who won the yoga competition!

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி - தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான யோகா போட்டிகள் திருச்சி, காட்டூர், உருமு தனலெட்சுமி கல்லூரியில் நடைபெற்றது. 20 கல்லூரிகளிலிருந்து 120க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த யோகா போட்டியில் மாணவர்கள் பிரிவில் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாக அணி முதலிடத்தையும், உருமு தனலெட்சுமி கல்லூரி இரண்டாவது இடத்தையும், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாவது இடத்தையும், புதுக்கோட்டை, மேலசிவபுரி, கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

Advertisment

மாணவியர்கள் பிரிவில் திருச்சி, உருமு தனலெட்சுமி கல்லூரி முதலிடத்தையும், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, இரண்டாவது இடத்தையும், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாவது இடத்தையும், புதுக்கோட்டை, மேலசிவபுரி, கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நான்காவது இடத்தையும் பிடித்தன.

இதில், உடற்கல்வி இயக்குநர் என.எஸ். சிவகுமார், உதவி உடற்கல்வி இயக்குநர் ஆர். எழிலரசி, பிஷப் ஹீபர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஏ. பால்ராஜ், திருச்சி யோகா சங்க செயலாளர் ராஜசேகர், யோகா ஆசிரியர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உருமு தனலெட்சுமி கல்லூரி செயலாளர் கே. ராமகிருஷ்ணன் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.