Advertisment

பள்ளி சென்ற மாணவர்கள்; ஆட்சியருக்கு நன்றி கூறிய பெற்றோர்கள்! 

Students who went to school! Parents who thanked the district collector

Advertisment

கரூர் மாவட்டம், தோகமலையை அடுத்த வாலியாம்பட்டி என்ற கிராமத்தில் பகுதியில் கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் இருந்தனர். இதனை அடுத்து கரூர் மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வித்துறையும் இணைந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் ‘மணி அடிச்சாச்சு’ என்ற திட்டத்தின் கீழ் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பெற்றோர்கள் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் அப்பகுதி மக்கள் பேருந்து வசதி இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் தங்களது குறைகளை கூறினர். இதனை அடுத்து அங்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டது. அதில், இன்று வலியாம்பட்டி கிராமத்திலிருந்து 24 மாணவ, மாணவிகளை பேருந்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஆர்.டி மலையில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக ஊர் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு நன்றி தெரிவித்தனர்.

karur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe