Advertisment

அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துநரைத் தாக்கிய மாணவர்கள்!

nn

கோப்புப்படம்

Advertisment

கடந்த 13 வருடங்களாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சிவகாசி கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார் சுரேஷ். விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு சென்ற அரசுப் பேருந்தைஓட்டுநர் கனிமுத்து இயக்க, நடத்துநராக சுரேஷ் இருந்துள்ளார். அந்தப் பேருந்தில் பயணித்த ஐடிஐ மாணவர்களான மதன்குமாரும் வசந்தும் விசிலடித்து தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவ்விருவரும் மதுபோதையில் இருந்ததால், சிவகாசி சாலையில் உள்ள பஜார் காவல் நிலையத்தில் புகார் கூறி, அங்கேயே இறக்கி விட்டுள்ளார் நடத்துநர் சுரேஷ்.

அப்பேருந்து சிவகாசி சென்றுவிட்டு மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பியபோது, பி.குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே, 17 வயது சிறுவனான மதன்குமாரும் வசந்தும் டூ வீலரில் வழிமறித்து நிறுத்தியதோடு, பேருந்துக்குள் ஏறி நடத்துநர் சுரேஷை தாக்கியிருக்கின்றனர். காயமடைந்த சுரேஷ், தன்னைப் பணி செய்யவிடாமல் வழிமறித்து பேருந்துக்குள் ஏறி தாக்கிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

conductor Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe