Students who stood like the map of India... World Achievement Award for GTN College!

இந்திய நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி வளாகத்தில் ஜி.டி.என் கல்வி குழுமம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Advertisment

இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வேடசந்தூர் கிருஷ்ணசாமி, சின்னாளப்பட்டி பூளூர் செட்டியார், சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணாமலையின் மனைவி பொன்னி, வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அழகர்சாமியின் மனைவி ஞானசுந்தரி, ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி கே.எம்.சடையாண்டியின் மகன் எஸ் பிச்சைமணி, நத்தம் பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி பிச்சையின் மனைவி அரியநாச்சி ஆகியோர் திறந்த ஜீப்பில் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஜி.டி.என் கலைக்கல்லூரி முதல்வர் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினார். 75 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்ட தேசியக் கொடியை வேடசந்தூர் தியாகி கிருஷ்ணசாமி ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

Advertisment

விழாவில் ஜி.டி.என் கல்விக் குழும மாணவ, மாணவியர்கள் சுமார் 3,000 பேர் ஆரஞ்சு, வெண்மை மற்றும் பசுமை ஆகிய நிறங்களில் உடை அணிந்து மூவர்ணத்தில் இந்திய வரைபடம் போல் நின்றனர். மேலும் நடுவில் ஊதா நிறத்தில் உடை அணிந்து அசோகச் சக்கரம் போல் நின்ற மாணவர்கள் சுற்றி வந்த போது சக்கரம் சுழலுவது இருந்தது.

இந்த நிகழ்ச்சி ஆரஞ்சு உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது. அதற்கான சான்றிதழை ஜி.டி.என் கல்லூரியின் செயலர் ரத்தினத்திடம் ஆரஞ்சு உலக சாதனை அமைப்பு சார்பில் கார்த்திகேயன் வழங்கினார்.