வீட்டுப்பாடம் எழுதாத மாணவர்கள்! கடுமையாகத் தாக்கிய ஆசிரியர்! 

Students who do not write homework! The teacher punished hard!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த திருமலையான்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 27 மாணவ - மாணவிகளை ஆசிரியர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி கடுமையாகத்தாக்கி உள்ளார். இதில் பல மாணவ - மாணவிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் மணப்பாறை மற்றும் புத்தாநத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

ஆசிரியர் வகுப்பில் உள்ள அனைவரையும் தாக்கியதாகவும், பின்னர் வலி அதிகம் இருந்தால் படுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகமும் சம்பவம் பற்றி தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe