Students traveling dangerously in a bus near Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும்மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் படிக்கட்டில் தொங்கிச் சென்று பயணம் செல்லும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. படியில் தொங்கிக்கொண்டு செல்வதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு தேவையான இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.