டிக் டாக் ஆடிய மாணவர்கள்... அரசாங்க விருந்தாளியானார்கள்!!

நெல்லை மாவட்டத்தின் ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு ஜாலியாக டிக் டாக் ஆடிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தின் சேரன்மகாதேவி பக்கமிருக்கும் காருகுறிச்சி புதுக்குடியைச் சேர்ந்த ஆத்தியப்பனின் மகன் சீத்தாராமான் (28) கூலித் தொழிலாளியான இவர், கடந்த 03ம் தேதியன்று ஆலங்குளம் போலீசார் வாகன சோதனையிலிருந்த போது மது அருந்தி விட்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தை ஒட்டிக் கொண்டு வந்த போது அவரை சோதனையிட்ட போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சீத்தாராமன் ஆலங்குளம் காவல் நிலையம் சென்றார்.

tick tak

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தகவல் கிடைத்து அவரைப் பார்ப்பதற்கு அவரது உறவினர்களான பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் இரண்டாமாண்டு மாணவர் மற்றும் பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் ஆகிய இருவரும் காவல் நிலையம் வந்தனர்.

அந்த காவல் நிலைய வாசலில் இருவரும் தனித்தனியாக பிரபலமான சினிமா பாடல்களுக்கு ஏற்றாற் போல நடித்து ஆடியபடி டிக் டாக் படம் பிடித்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக, அதிர்ந்த போலீசார் விசாரணை நடத்தினர் இரண்டு மாணவர்களோடு இருந்த சீத்தாராமன் உள்ளிட்ட மூன்று பேர் மீது இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிவு செய்து அவர்களை ஆலங்குளம் குற்றவியல் கோர்ட்டில் ஆஐர்படுத்தினர்.

மூவரும் பாளை, நாங்குனேரி பாஸ்டர், மற்றும் நெல்லை காப்பகம் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

.

arrest police tick tak
இதையும் படியுங்கள்
Subscribe