Advertisment

மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்; பதற்றத்தில் கிராமம் - ஒருவர் மரணம்

Students suffering from jaundice in Pudukkottai

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வயலோகம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகளில் சுமார் 15க்கு மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ரித்தீஷ் என்ற மாணவன் கடந்த மாதம் மஞ்சள் காமாலைகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் இன்று புதன் கிழமை அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தியுள்ளனர். சுகாதாரத் துறையின் சார்பில் மஞ்சள் காமாலை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

Students suffering from jaundice in Pudukkottai

Advertisment

மேலும் தொடர்ந்து மருத்துவமுகாம் நடத்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரே கிராமத்தில் ஒரே தெருவில் வசிக்கும் இரு பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் மஞ்சள் காமாலையில் பாதிக்கப்படுவது வருத்தத்திற்குரியதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப் போவதாக பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

students Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe