Skip to main content

மாணவிகள் போராட்டம்:ராட்சஷன் பட வில்லன் பேராசிரியர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

கரூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு பின்  கைது செய்யப்பட்ட அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் இளங்கோவனின் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் மாணவிகளின் தொடர் போராட்டத்தினால் தள்ளுபடி செய்த நீதிபதி மாணவிகளிடம் விசாரணையும் நடத்தினார். 



கரூர் அரசு கலைக்கல்லூரியில் பொருளியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த இளங்கோவன், தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். 

 

pro



இந்த கல்லூரி மாணவிகள் மாவட்ட காவல்துறை, மாவட்ட எஸ்.பி. ஆகியோரிடம் புகார் கொடுத்தும் முறைய நடவடிக்கை இல்லாமல் காலம் தாழ்த்திக்கொண்டே இருந்த நிலையில் மாணவிகளின் நீண்ட போராட்டத்துக்குப் பின் கைது செய்யப்பட்டு 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதியப்பட்டு கரூர் சிறையில் அடைக்கப்பட்டார் ராட்சஷ படத்தில் வில்லன் பேராசிரியர் இளங்கோவன், ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தான்.



அந்த மனு மீதான விசாரணை விசாரணைக்கு வருவதை அறிந்த மாணவிகள், நீதிமன்ற வளாகத்தில் திரண்டு, அவனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கோஷங்கள் போட ஆரம்பித்தனர். மாணவிகள் தீடிர் என நீதிமன்றத்திற்கு வருவதை பார்த்த நீதிபதி பாதிக்கப்பட்ட 10 மாணவிகளை தனித்தனியாக அழைத்து வாக்குமூலம் பெற்ற நீதிபதி, இளங்கோவனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



மாணவிகளின் போராட்டம் நீதிமன்றத்தின் வெளியே நடைபெற்றதும். அவர்களை நீதிபதியே நேரடியாக அழைத்து விசாரணை செய்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் மாவட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக நிர்வாகி ஜாமீன் மனு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Bail plea of BJP executive; High Court action

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘காவல்துறையினர் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கில் தன்னை சேர்த்துள்ளது. நான் இதுவரையில் தலைமறைவாகவில்லை. முன் ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் அளிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

Bail plea of BJP executive; High Court action

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

Bail plea of BJP executive; High Court action

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (10.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, “குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் தலைமறைவாக இருப்பதால் அகோரத்திற்கு ஜாமீன் வழங்கக்கூடாது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சியங்களை கலைத்துவிடுவார்” என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து அகோரத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அகோரத்தின் மீது உள்ள 47 வழக்குகளில் சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. மேடைப்பேச்சு மற்றும் மறியல் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அகோரத்தின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது