Skip to main content

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவர்கள் மகிழ்ச்சி!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

 

தேர்வு முடிவுகளை மாணவர்கள், dge.tn.gov.indge.tn.nic.inexamresults.nethttp://www.results.nic.in/ போன்ற இணையத்தளங்களில் அறிந்துகொள்ளலாம்.

 

திருவல்லிக்கேணி - வெலிங்டன் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் தங்கள் தேர்வு முடிவுகளை செல்போனில் பார்த்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்காவில் தமிழக மாணவி அதிரடி கைது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Tamil Nadu student arrested in America

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர்கள் அமைப்பினர், பொது மக்கள் பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள், காசா போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை அமெரிக்கா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும், போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று (25-04-24) காலை பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக விதிகளை மீறி இந்தப் போராட்டம், நடத்தப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹசன் சையத் மற்றும் மாணவி அச்சிந்தியா சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதில், அச்சிந்தியா சிவலிங்கம், கோவை மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் படிக்கும் மாணவி ஆவர். இந்தக் கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு; மாநில அளவில் வேலூர் மாணவி முதலிடம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Vellore student topper in Tamil Nadu with 497 marks out of 500 in CBSE 12th exam

 

நடந்து முடிந்த 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பள்ளிகளின் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஷிருஷ்டி என்கிற தனியார் பள்ளியை சேர்ந்த ரேஹா சுந்தரேசன் ராஜ் என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்களும் ஆங்கிலம், கணிதம், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 100க்கு தலா 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 

 

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ஷிருஷ்டி பள்ளி குழும தலைவர் சரவணன் உட்பட ஆசிரியர்கள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர். தனது உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களுக்கு மாணவி நன்றி தெரிவித்துக்கொண்டார். மாநில அளவில் 2வது இடத்தில் சென்னை பத்ம ஷேஷாத்ரி பள்ளியியும், 3வது இடத்தில் கோபாலபுரம் DAV பள்ளியும் வந்துள்ளன.