Students protest transfer of teacher from school

ராணிப்பேட்டை மாவட்டம் பெல் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு நிதி உதவி தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக சந்தான லட்சுமி என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரை தற்போது சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Advertisment

இதனைக் கேள்விப்பட்ட அப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பெரு அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆசிரியரை இந்த பள்ளியில் இருந்து மாற்றக்கூடாது எனவும் ஆசிரியரும், இங்கிருந்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது எனத் தெரிவித்து பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை தடுத்து நிறுத்தி வைத்து கண்ணீர் மல்க மிகுந்த வேதனையுடன் கோரிக்கையாக வைத்தனர்.

Advertisment

சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியரை திடீரென பணியிட மாறுதல் செய்யும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் எனவும் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆசிரியரைத் தொடர்ந்து இப்பள்ளிலேயே பணியாற்றும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையாகத் தெரிவித்து வருகின்றனர்.