குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரால் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சென்னையில் புதுக்கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தோடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று இரவு முழுவதும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் போராட்டம் ஓயாது நடைபெற்று வந்தது. போராட்டம் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான போலிஸார் கல்லூரி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்னிலையில் மாணவர்களின் போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கழகம் ஜனவரி 01 வரை விடுமுறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவிலும் தளராத மாணவர் போராட்டம்..! குவிக்கப்பட்ட போலிஸ் பட்டாளம். (படங்கள்)
Advertisment