students incident govt teacher police in coimbatore

Advertisment

கோவையில் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், வெள்ளலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் விஜய் ஆனந்த், 11ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, புகைப்படங்களை அனுப்பக் கோரி வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆன்லைன் வகுப்பு நடந்தபோது, மாணவிகளுக்குத் தனியாக வீடியோ காலில் அழைப்பது, டிசர்ட் அணிந்துகொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களிலும் அந்த ஆசிரியர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகமாணவிகள் தலைமையாசிரியரிடம் புகார் கூறியதாகவும், அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பிரச்சனைகுறித்து பேசியதாகவும் தெரிகிறது. ஆனால் ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறிமாணவ, மாணவியர் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதற்கிடையே, பள்ளி ஆசிரியர் விஜய் ஆனந்தை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அந்த நகலைக் காண்பித்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படிமாணவர்களிடம் பள்ளி நிர்வாகிகள் கேட்ட பின்னரும், ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.