Advertisment

“மாணவிகள் புகார் கொடுத்திருக்கிறார்கள்; அறிக்கை வெளிவரும்போது தெரியும்” - மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமரி

'Students have complained; We will know when the report comes out'- State Women's Commissioner Thalavi Kumari interview

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி ஒருவர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ''ஒரு மெயின் சீனியர் ஸ்டாப். அவர் பெயர் ஹரிபத்மன். அவரை இங்கே தங்க வைத்து வீடு எல்லாம் கொடுத்து மரியாதை செலுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவருக்கு தகுதியே கிடையாது. அவர் எங்கள் பிள்ளைகளுக்கு வார்த்தைகளால் தொல்லை கொடுக்கிறார். பாலியல் தொல்லை கொடுக்கிறார். பார்க்கின்ற பார்வையே சரியில்லை. இன்னும் 3 பேர் இருக்காங்க சஞ்சிதலால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன். சஞ்சிதலால் பசங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிச்சம் இரண்டு பேர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்'' என்றார். 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கொடுமைகள் நடைபெற்று வருவதாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கும், மத்திய கலாச்சாரத்துறைக்கும் மாணவிகள் ஆன்லைன் மூலம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

'Students have complained; We will know when the report comes out'- State Women's Commissioner Thalavi Kumari interview

இதுவரை எழுத்துப்பூர்வமாக மாணவிகள் யாரும் புகார் அளிக்கவில்லை என்று சென்னை கூடுதல் காவல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்த நிலையில், காலை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கல்லூரி வளாகத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''ஜூம் காலில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினேன். நேரில் 12 பேரிடம் விசாரணை நடத்தினேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான புகார்களை சொல்கிறார்கள். இதையெல்லாம் நான் அறிக்கையாகத்தான் சொல்ல முடியும்.

எல்லோரும் கல்லூரி மாணவிகள் எனவே வெளியில் சொல்ல முடியாது. அவர்கள் என்னை நம்பி சொல்லி இருக்கிறார்கள். அதை நான் அறிக்கையாக அரசிடம் கொடுப்பேன். எழுத்துப்பூர்வமாக புகாரும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பெண் மட்டும் வாபஸ் வாங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஆனால் பல பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். நான்கு பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்கு கல்லூரி டைரக்டரை பார்த்து பேச இருக்கிறேன். அப்படி அவர் வர முடியவில்லை என்றால் நான் கல்லூரிக்கு வருவேன். மாணவிகளிடம் போராட்டத்தை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். கண்டிப்பாக இந்த அரசு எதுவாக இருந்தாலும் நேர்மையாக செய்யும் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறேன். பழைய மாணவிகளும் 3 பேர் என்னிடம் பேசியுள்ளனர். எழுத்துப்பூர்வமாகபுகாராக கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். மாணவிகள் விவகாரம் என்பதால் கவனத்துடன் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

struggle
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe