Students going to do transport work in uniform!

Advertisment

திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ஒரு தனியார் ஹாலில் இன்று போலீஸ் - பள்ளி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகர போலீஸ் அதிகாரிகள், பள்ளிகளின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் பாதுகாப்பு, ஒழுக்கத்தினை மேம்படுத்துதல், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளில் கலந்துரையாடல் நடைபெற்றது.கூட்டத்தின் முடிவில், திருச்சி மாநகர போலீசாரும், பள்ளி மாணவ, மாணவியர்களும் இணைந்து சாலை பாதுகாப்பு ரோந்து குழுவை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் இந்த ரோந்து குழு ஏற்படுத்தப்படும். இந்த குழுவில் சேரும் மாணவ, மாணவியர்களுக்கு போலீசார் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் சீருடையில் போக்குவரத்து தொடர்பான பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.