Skip to main content

குளிக்கச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Students drowned in the well while taking a bath

கரூர் ஆண்டான் கோவில் ஊராட்சி ரெட்டிபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12), இளங்கோ மகன் மாரிமுத்து (13), ஸ்ரீதர் மகன் விஷ்ணு ( 13) ஆகிய மூன்று மாணவர்களும் நேற்று மாலை விளையாடச் சென்றார்கள் ஆனால், இரவு நீண்ட நேரமாகியும்  மூவரும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர், அக்கம்பக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் தேடியும் மூவரும் கிடைக்காததால், கரூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனிடையே சக மாணவர்களிடம் மூவர் குறித்து விசாரித்த போது, மூவரும் அருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றது தெரிய வந்தது. உடனடியாக கிணற்றிற்கு அருகே சென்று பார்த்தபோது, அங்கே மாணவர்கள் உடமைகள் இருந்துள்ளது. மாணவர்கள் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் குதித்து தீவிரமாகத் தேடினர். இறுதியாக மூவரின் உடலையும் தீயணைப்புத் துறை வீரர்கள் கிணற்றில் இருந்து மீட்டர். அதன்பின் மூவரின் உடலும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிக்கச் சென்ற மூன்று மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்