
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் புல இறுதியாண்டு இளநிலை மாணவர்கள் பின்னலூர் கிராமத்தில் உள்ள வீர நாராயணன் வேளாண் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன், இயக்குநர்கள் ரங்கநாயகி, ராஜேந்திரன் மாணவர்களை வரவேற்று நிறுவனத்தின் செயல்பாடுகள் விதை உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் விற்பனை முயற்சிகளை விளக்கிக் கூறினர். இதனைத் தொடர்ந்து விவசாயம் சார்ந்து மாணவர்கள் விவசாயிகளுடன் பல்வேறு சந்தேகங்களுக்குரிய கேள்வியும் அதற்கான விளக்கமும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் வீரநாராயண விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட 48 இளநிலை வேளாண் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் செயல் அதிகாரி நிரஞ்சன் நிறுவனத்தின் இயந்திரங்கள் குறித்து விளக்கிக் கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை இணைப் பேராசிரியர் ராஜ் பிரவீன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்தக் கள ஆய்வு வேளாண் மாணவ மாணவிகளுக்குப் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் கூறினார்கள்.