Advertisment

பள்ளி மேசைகளை சேதப்படுத்தி மாணவர்கள் அட்டகாசம் - அதிர்ச்சி வீடியோ 

Students desecrate school desks  shocking video

வேலூரில் அரசுப்பள்ளி ஒன்றில் பள்ளி மேசைகளை மாணவர்கள் சேதப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

வேலூர் அருகேயுள்ள தொரப்பாடியில் மேல்நிலை அரசு பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. கடந்த சனிக்கிழமையன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வகுப்புகள் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டிற்கு செல்லாத சில மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி வகுப்பறையில் இருந்த இரும்பு மேசைகளை சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆம்பூரில் அரசுப்பள்ளி ஆசிரியரை ஆபாசமாகத் திட்டி மாணவர் ஒருவர் தாக்க முயற்சித்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பாக மூன்று மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe