Advertisment

“கை கழுவுங்கள், நீண்ட காலம் வாழுங்கள்” -விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களின் பிரமாண்ட முயற்சி..! (படங்கள்)

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு கரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னை, கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியிலும் மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் போது சோப்பு போட்டு கை கழுவுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 10,000 சதுர அடி பரப்பில் 25,000 சோப்புகளைப் பயன்படுத்தி கை கழுவுதல் போன்ற பிரமாண்ட வடிவத்தையும், கை கழுவுங்கள் நீண்டகாலம் வாழுங்கள் என்ற வாசகத்தையும் மாணவர்கள் அமைத்தனர். மேலும், அந்த அமைப்பைச் சுற்றி மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு வாசகங்களுடன் நின்று கரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

students corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe