Skip to main content

தினந்தோறும் கொடுமை.... மாணவிகள் புகார்....

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
kitchen



கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள கல்லூரியில் தொலைதூரத்தில் இருந்து கல்லி பயில வரும் மாணவ, மாணவிகளின் விடுதிகளை கண்டுகொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 


குறிப்பாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை கீழ்தரமாக பேசுவதும், 100 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு போதுமான உணவுகள் இருப்பதில்லை.  60 மாணவிகளுக்கு தேவையான சாப்பாட்டை மட்டும் சமைத்து விட்டு, 100 பேரும் உணவு அருந்துமாறு கூறுகிறார்கள். இநத் கொடுமை தினந்தோறும் நடைபெறுவதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
 

விடுதியில் தங்கியிருக்கும் மாணவி ஒருவர், எனது ஊரில் இருந்து வருவதற்கு ஒரு நாளைக்கு 58 ரூபாய் ஆகிறது. போதிய பேருந்து வசதியும் கிடையாது. தினந்தோறும் சென்று வர பொருளாதார நெருக்கடியும் உள்ளது. படிப்பதற்கு போதுமான நேரத்தையும் ஒதுக்க முடியாது என்பதால்தான் விடுதியில் தங்கினேன். என்னைப்போன்ற பல ஏழை மாணவிகள் தங்கியுள்ளனர்.
 

மாணவிகளுக்கு தேவையான அரிசி மூட்டைகள் விடுதிக்கு வருவதாக சொல்கிறார்கள். ஆனால் ஏன் மாணவிகளுக்கு போதுமான உணவுகளை தயாரிக்கவில்லை என்று அரசு கண்டுபிடித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்