கோவை பொள்ளாச்சி அருகே ஒரு ரிசார்ட்டில்கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட 159 கேரள மாணவர்களைகோவை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் அந்த ரிசார்ட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

கோவை பொள்ளாச்சியில் சேத்துமடை அண்ணாநகர் பகுதியில்ஒருதோட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் கஞ்சா, போதை மாத்திரை, மதுபோன்றவைகளை மாணவர்கள் உட்கொண்டு ரகளையில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

 Students in  Cannabis ... Seal for Luxury Resort in Coimbatore

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள் என்பதும், அவர்கள் அந்த ரிசார்ட்டில் விடிய விடிய மது விருந்து நடத்தி நடனமாடி கூச்சலிட்டுள்ளனர் என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த புகாரை அடுத்து கோவைஎஸ்பி சுஜித்குமார் தலைமையிலான போலீசார் அந்த ரிசார்ட் தோட்டத்தில் புகுந்து ஆய்வு நடத்தியதில் கஞ்சா, மது என விடிய விடிய மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது உறுதியானதைஅடுத்து 159 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அந்த தோட்டத்தின் உரிமையாளர் கணேஷ் மற்றும் ஊழியர்கள் 6 பெரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தற்போதுகோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடுத்த உத்தரவின் பேரில் அந்த சொகுசு ரிசார்ட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.