Published on 29/01/2022 | Edited on 29/01/2022

பள்ளி கல்வித் துறையில் இருக்கும் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், ‘மாணவர்களும், பொதுமக்களும் சான்றிதழ்களை பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்வதால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கல்வி இணைச் சான்று, உண்மைத் தன்மைச் சான்றிதழ், தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழின் இரண்டாம் படி, பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம், ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்று இரண்டாம்படி, விளையாட்டு முன்னுரிமைச் சான்று, நன்னடத்தைச் சான்று உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.