Student's body found on railway tracks

Advertisment

திருத்தணி அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை ஒட்டியுள்ளது சிங்கராஜபுரம். அங்கு வசித்து வந்த தோனீஸ்வரன் என்ற மாணவன் அருகிலிருந்த கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச்சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தோனீஸ்வரனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவன் தோனீஸ்வரன் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞரின் உடல் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.