Advertisment

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் துவங்கி நடைபெற்றுவருகிறது. தினமும் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் காண பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படும். அந்தவகையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம், தாமரைத்தங்கள் கிராமத்தைச்சேர்ந்த பில்லாபோங்க் ஹை இண்டர்நேஷனல் பள்ளி மாணவிகள் சட்டப்பேரவைக் கூட்டத்தை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மு.க.ஸ்டாலின் உட்பட பல அரசியல் பிரமுகர்களைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.