Advertisment

மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி? - அண்ணா பல்கலைக்கழகம்

கதச

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை (20.04.2021) முதல் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தேர்வுகளை மத்திய மாநில அரசுகள் ஒத்திவைத்து வருகின்றன. தமிழகத்தில் கூட 12ஆம் வகுப்பு தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தேர்வும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வை மாணவர்கள் ஆன்லைனில் எழுதினர். அதன் முடிவுகளும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், ஆன்லைன் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

Anna University
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe