Advertisment

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மாணவர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கைக்கு நாடு முழுவதும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை குல கல்வி முறை, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை முன்னெடுப்பதாகவும் கல்வி ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மற்றும் அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று (19.08.2020) சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா மாணவர் விடுதி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் “தனியார்மயம் வியாபாரமயம், மதமயம், மத்திய மயத்தை புகுத்தாதே” என்ற மத்திய அரசுக்கு எதிரான வாசகம் அடங்கிய பாதகைகளை உயர்த்தி பிடித்திருந்தனர்.

Advertisment

NEW EDUCATION POLICY protest students protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe