மீண்டும் மீண்டும் தேர்வு கட்டணம் வசூலிக்கும் கல்லூரி நிர்வாகம்... மாணவர்கள் தர்ணா போராட்டம்!

semester exam fee students nagai district

செமஸ்டர் தேர்வுகளுக்கு மீண்டும் கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் மீண்டும்மீண்டும் தேர்வு கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்திய நிலையில், மீண்டும் கட்டண வசூலில் ஈடுபடும் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

semester exam fee students nagai district

போராட்டத்தில், ஏற்கனவே கட்டணம் செலுத்திய பிறகும் மீண்டும் தேர்வு கட்டணத்தை வசூல் செய்வதை நிறுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். "கரோனா காலத்தில் ஏற்கனவே தேர்வு கட்டணம் செலுத்திய தங்களிடம், மீண்டும் கல்லூரி நிர்வாகம் தேர்வு கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்தக் கட்டண வசூல் கொள்ளையைத் தமிழக அரசுதடுக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என ஆதங்கப்படுகிறார்கள் போராட்டத்தில் உள்ள மாணவர்கள்.

College students Nagai district
இதையும் படியுங்கள்
Subscribe