Advertisment

ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! 

Students admitted to hospital for eating shawarma

Advertisment

'ஷவர்மா'வைச் சாப்பிட்ட மூன்று மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பரிமலேஸ்வரன், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூவரும் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் நேற்று (05/05/2022) தான் தங்களது சொந்த ஊரில் இருந்து கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில், ஒரத்தநாடு பிரிவு சாலைக்கு அருகே உள்ள ஒரு துரித உணவகத்தில் இரவு உணவாக 'ஷவர்மா'வைச் சாப்பிட்டுள்ளனர். பின்னர், கல்லூரிக்கு சென்ற அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

Advertisment

அதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று மாணவர்களை உடனடியாக தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஏற்கனவே, கேரளாவில் ஷவர்மா உணவு சாப்பிட்ட ஒரு மாணவி உயிரிழந்த நிலையில், தஞ்சையிலும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Thanjavur hospital students college shawarma
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe