தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்றது. இதில் திருச்சி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவன் முகமது ஜமால் பாஷா நீச்சல் போட்டியில் இளநிலை பிரிவில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
Advertisment
இதனைத் தொடர்ந்து, நேற்று தமிழகம் திரும்பிய அவர் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.