Advertisment

பள்ளிக்கு சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து பலி!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன்சசிபாலன் (வயது14). வேப்பூர்அரசு மேல்நிலை பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தான்.

Advertisment

நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் சசிபாலன் இயற்கை உபாதை கழிக்க பள்ளிக்கு அருகிலுள்ள வெளி இடத்திற்கு சென்றுள்ளான்.

Advertisment

student

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

அப்போது அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளான்.பெற்றோர்கள் பள்ளி முடிந்து மகன் வரவில்லை என்று தேடி பார்த்துவிட்டு வேப்பூர் காவல் நிலைத்தில் புகார் அளிக்க இரவு எட்டு மணியளவில் சென்றுள்ளனர். பின்னர் மாணவன் கிடந்த கிணற்றின் அருகில் இயற்கை உபாதை கழிக்க சென்றவர்கள் பார்த்துவிட்டு தகவல் கூறினர்.பின்னர் மாணவன் உடலை அடையாளம் கண்டு உடலை கிணற்றிலிருந்து தூக்கினர்.

இது குறித்து வேப்பூர் போலிசார் விசாரித்து வருகின்றனர். வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் கழிவறை வசதி இல்லாததே மாணவன் இறப்புக்கு காரணம் எனவும், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனியாவது

கழிவரை கட்டி கொடுக்கவும், இறந்த மாணவன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

death student well
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe