Advertisment

காணாமல் போன 10 ஆம் வகுப்பு மாணவி; பள்ளி சீருடையில் சடலமாக மீட்பு

student who went missing near Vellore was founded passed away near train track

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகளான 15 வயதானபிரியங்கா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நடுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீட்டுக்கு திரும்பாததால்அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

இன்று காலை மேல்பட்டி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் மாணவி பிரியங்கா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பின்னர் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் மற்றும் குடியாத்தம் நகர போலீசார், ஏன் தற்கொலை செய்து கொண்டார், காரணம் என்ன என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன பள்ளி மாணவி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

school students Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe