Advertisment

குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் உயிரிழப்பு

 A student who went to bathe in the pool lost their live

சிதம்பரத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளிச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் மணிகண்டன்(13). இவர் அண்ணாமலை நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவனின் பாட்டி வீடான சிதம்பரம் அருகே உள்ள சிதம்பரநாதம்பேட்டையில் உள்ள கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள குளத்தில்குளித்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.இதனையறிந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

pool
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe