student who threw a incident and posted it on Instagram

Advertisment

விழுப்புரம் மாவட்டம் – கோட்டக்குப்பம் - அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மணிவண்ணனின் மகன் மூசா (வயது 19) திண்டிவனத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி படிக்கிறார். இவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்து, காவல்துறையினர் ரோந்து சென்றபோது, அவர்களுக்குத் தெரியாமல் பின்னால் நின்று வீசிவிட்டு, அதை வீடியோவாகவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

அந்த இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்த சிலர், கோட்டக்குப்பம்காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பேரில் கோட்டக்குப்பம்காவல்துறையினர், மூசாவை அழைத்து விசாரணை செய்தபோது, “ஊரில்பலரும் என்னைக் கெத்தாகப் பார்க்கவேண்டுமென்று நினைத்தேன். அதனால் இப்படிச் செய்தேன்.” எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மூசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுசிறையிலடைக்கப்பட்டுள்ளார்.