ADVERTISEMENT

நண்பர்களை காப்பாற்றிவிட்டு சுழலில் சிக்கி பலியான மாணவன்!

11:40 AM Jan 11, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாக்களின் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய பழனிக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு மதுரை, காரைக்குடி, சேலம், திருப்பூர், திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர்.

அதே போல் இவர்கள் இரவில் நடக்கும்போது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் பலர் இறந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகேயுள்ள காசி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனியார் வங்கி ஊழியர் மணி. இவரது மகன் சஞ்சய் அவரது நண்பர்களுடன் பழனி முருகனை தரிசன செய்ய பாதயாத்திரையாக சென்றுள்ளார். இவர் தாராபுரத்தை கடந்த போது அமராவதி ஆற்றில் தண்ணீர் நிறைந்து செல்வதை கண்டதும் நணபர்கள் இருவரும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளார்.

அப்போது உடன் வந்த இரண்டு நண்பர்கள் ஆற்றின் சுழலில் சிக்கியுள்ளனர். இதனை கண்ட சஞ்சய் விரைந்து சென்று சுழலில் சிக்கிய நண்பர்களை காப்பாற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக சுழலி சிக்கிய சஞ்சய் அதிலிருந்து மீள முடியாமல் ஆற்று நீரில் மூழ்கினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரமாக போராடி மாணவன் சஞ்சயின் உடலை மீட்டனர். உடன் வந்த நண்பர்களின் உயிரை காப்பாற்ற தன்னுயிரை இழந்த சஞ்சையின் செயல் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோத்தை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT