/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/333_20.jpg)
கண்டமங்கலத்தில் அரசுப் பள்ளிதலைமை ஆசிரியரை 12ஆம் வகுப்பு மாணவன் மது போதையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் பணிபுரிகிறார். இந்நிலையில் பள்ளிக்கு மது அருந்திவிட்டு வந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் மாணவிகளைத்திட்டியுள்ளார். இப்பிரச்சனை தலைமை ஆசிரியரிடம் செல்லவே அவர் மாணவனை அழைத்துக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 12ஆம் வகுப்பு மாணவன் தலைமை ஆசிரியரைத்தாக்கியுள்ளார். இதனால் தலைமை ஆசிரியரின் பின் பக்க தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அரசு சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற பின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பின் காவல்துறையினர் மாணவனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
அதே வேளையில் பள்ளி மாணவனை கண்டமங்கலம் அரசுப் பள்ளியிலிருந்து வளவனூர் அரசுப் பள்ளிக்கு மாற்றி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)