Advertisment

ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப்; அரசு மருத்துவமனையில் அவலம்

student was treated with tea cup instead oxygen mask government hospital kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம்உத்திரமேரூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவனை அருகில் உள்ளஉத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அப்போது மாணவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பொறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த சமயத்தில் மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லை என்று சொல்லப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து ஆக்சிஜன் மாஸ்க்குக்குபதிலாக அந்த மாணவனுக்கு டீ குடிக்கப் பயன்படுத்தும் கப்பை வைத்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அங்கிருந்தவர்களில் ஒருவர்தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, பலரும் அந்த வீடியோவைப் பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகருத்து தெரிவித்து வந்தனர்.

Advertisment

இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், உத்திரமேரூர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் சம்பவம் குறித்து உரிய விளக்கம் கேட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

kanchipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe