Advertisment

தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 7 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ரவி, நேற்று அந்த சட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல், மாணவர் அமைப்புகளும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், இன்று சென்னை சைதாப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கே.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.