stusss

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொய்கை சத்தியமங்களம் புதுகாலணியை சேர்ந்த சங்கர் மகன் அருண்பிரசாத். பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்தான். பள்ளிக்கு ஓழுங்காக வருவதில்லை என்பதாலும், பள்ளியில் முரட்டு தனமாக நடந்துக்கொள்பவன் என்பதால் இவனை ஆசிரியர்கள் கண்ணப்பன், குமார், தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளனர்.

Advertisment

கடந்த 3ந்தேதி தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளான் அருண்பிரசாத். இதுப்பற்றி விரிஞ்சிபுரம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் புகார் கூறியதால் அவர்கள் திட்டியுள்ளனர் இதனால் தற்கொலை செய்துக்கொண்டான் என்றது போலிஸ்.

Advertisment

இந்நிலையில் செப்டம்பர் 7ந்தேதி பொய்கை பள்ளியை முற்றுகையிட்ட அருண்பிரசாத் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் கண்ணப்பனை அடித்து உதைத்தனர். இதைப்பார்த்த மற்ற ஆசிரியர்கள் எதனால் எனத்தெரியாமல் பயந்து நடுங்கினர். என் பையனை சாதீ பெயரை சொல்லி திட்டியிருக்கிங்க அடிச்சியிருக்கிங்க உங்களை விடமாட்டோம், இதோ பார் சாகறதுக்கு முன்னாடி என் மகன் எழுதிவைத்த கடிதம் எனக்காட்டினர். அதில் இருப்பதை படித்ததும், மற்ற ஆசிரியர்கள் பாதுகாப்பாக ஒரு அறைக்குள் பதுங்கிக்கொண்டனர்.

மாணவர்கள் பலரும் பள்ளியைவிட்டு வந்து அருண்பிரசாத் உறவினர்களோடு சேர்ந்து போராடினர். பிரச்சனை பெரிதானதும் விருதம்பட்டு போலிஸார் வந்து மறியலை கைவிட வைத்ததோடு, ஆசிரியர்களை பாதுகாத்தனர்.

Advertisment

இந்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ்க்கு தெரிவிக்கப்பட அவர் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்துகிறேன், தவறு செய்துயிருந்தால் நிச்சயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கிறேன் என நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகவைத்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இப்படி தாக்குதல் நடத்தினால் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்த முடியும் என்கிற கேள்வி எழுப்புவார்கள், தங்களது பாதுகாப்புக்காக என்ன செய்யலாம் என ஆலோசனை செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களின கூட்டமைப்பு சார்பில் இன்று செப்டம்பர் 8ந்தேதி வேலூர் ஆசிரியர் இல்லத்தில் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.