தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ்டூ மாணவர் தினேஷ் இன்று வெளியான தேர்வு முடிவில் 1200க்கு 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அதிகாலையில் ஓரு மாணவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.அந்த மாணவரின் உடலை கீழே இறக்கிய போலீசார்அவரது தோளில் கிடந்த பையை சோதனையிட்டதில் ஒரு கடிதமும், ‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் துணிகளும் இருந்தன.
style="display:inline-block;width:728px;height:90px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவர் எழுதியிருந்த கடிதத்தில், “அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே. மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்.
குடிக்காதே அப்பா இனிமேலாவது. அப்பதான் நான் சாந்தி அடைவேன். இனிமேலாவது தமிழகத்தில் முதலமைச்சர் டாஸ்மாக் கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்” என உருக்கமாகஎழுதி கையெழுத்திட்டுள்ளார்.
பிளஸ்டூ தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த மாணவனின் இந்த தற்கொலை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று பிளஸ்டூ தேர்வு முடிவு வெளியாதை தொடர்ந்து. மன வருத்தம் இருந்தாலும் தினேஷின் தேர்வு முடிவை சித்தப்பா மணி, மாமா சங்கரலிங்கம் ஆகியோர் வாங்கி பார்த்தனர். தினேஷ் பிளஸ்டூவில் 1024 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் எடுத்துள்ள மதிப்பெண் விபரம்:
தமிழ் - 194
ஆங்கிலம் - 148
இயற்பியல் - 186
வேதியியல் - 173
உயிரியல் - 129
கணிதம் - 194
மொத்தம் - 1024
இப்படி நல்ல மதிப்பெண் எடுத்தும் அவன் இறந்துவிட்டானே என அவரது சித்தப்பா மற்றும் அவரது உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.