Skip to main content

ரமலானுக்காக உண்டியலில் சேர்த்த பணத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய அரசுப் பள்ளி மாணவன்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள காரணியானேந்தல் பகுதியைச் சேர்ந்த பஷீர்அலி - சபுராம்மாள் இவர்களின் மகன் சிபிர்கான் (13). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாடுமுழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸின் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

 

Student Savings Money


 

இந்நிலையில் மாணவன் சிபிர்கான் வருகின்ற ரம்ஜான் பண்டிகைக்காக, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த தொகை ரூ4,862 யை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின்லூதர்கிங் அவர்களிடம் தெரிவித்துள்ளான்.
 

இதையடுத்து மாணவனின் சொந்த ஊரான காரணியேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கே அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர், வட்டாச்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் சென்று மாணவனிடம் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தைப் பொது நிவாரண நிதிக்குப் பெற்றுக்கொண்டனர். அப்போது மாணவரைப் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அரசுப் பள்ளி மாணவன் தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைக் கரோனா நிதிக்கு வழங்கிய சம்பவம் அனைவருக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அப்பகுதியில் மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.